Homeசெய்திகள்சினிமாலேபில் தொடர் நவம்பரில் ஓடிடி தளத்தில் வெளியீடு

லேபில் தொடர் நவம்பரில் ஓடிடி தளத்தில் வெளியீடு

-

ஜெய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தீராக்காதல். ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, விருத்தா விஷால் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரோஹின் வெங்கடேஷ் இப்படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இப்படத்திற்கு சித்து குமார் இசை அமைத்திருந்தார். கடந்த மே 26-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து, அருண்ராஜா காமராஜ் இயக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் ஜெய் நாயகனாக நடித்து வருகிறார். இந்த தொடருக்கு ‘லேபில்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெய் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நாயகியாகவும் நடிக்கிறார். மேலும் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் இந்தத் தொடருக்கு சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார். இத்தொடரின் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், லேபில் தொடர் வரும் நவம்பர் 10ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

MUST READ