தமிழில் எங்கேயும் காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, அடுத்தடுத்து மாப்பிள்ளை, வேலாயுதம், வாலு, சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய், தனுஷ், ஆர்யா, சிம்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் அவர் ஜோடி சேர்ந்துள்ளார். இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் முடித்துக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து, அண்மையில் அவரது நடிப்பில் பார்ட்னர் என்ற திரைப்படம் வெளியானது. அதில், ஆதிக்கு ஜோடியாக அவர் நடித்திருப்பார். மேலும், சாந்தனு மற்றும் முகின் ராவுடன் இணைந்து இணைய தொடரிலும் அவர் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பு மற்றும் தொழில்களிலும் ஆர்வம் செலுத்தி வருகின்றார்.
தற்போது, இயக்குனர்கள் சபரி மற்றும் குரு சரவணன் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு அடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியாகிறது. நடிகர் விஜய் சேதுபதி முன்னோட்டத்தை வெளியிடுகிறார்.