Homeசெய்திகள்உலகம்இஸ்ரேல் - ஹமாஸ் போர் : பலி எண்ணிக்கை 9,500ஐ தாண்டியது..

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : பலி எண்ணிக்கை 9,500ஐ தாண்டியது..

-

- Advertisement -

இஸ்ரேல் - ஹமாஸ் போர் : பலி எண்ணிக்கை 9,500ஐ தாண்டியது..

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 24வது நாளை எட்டியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,500 ஐ கடந்துள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், கடந்த 7 ஆம் தேதி போர் தொடங்கியது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பும், பாலஸ்தீனிய ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினரும் அதிரடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். அத்துடன் 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வ போரை அறிவித்து பதில் தாக்குதலை தொடங்கியது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் இன்று 24வது நாளை எட்டியுள்ளது. இரு தரப்பும் மாறி மாறி வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 500 ஐ தாண்டியுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேரும், காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 ஆயிரத்து 05 பேரும் , பாலஸ்தீன மேற்குகரை பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 117 பேரும் என மொத்தம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,587 ஆக அதிகரித்துள்ளது. இதில் காசாவில் 3,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானதாக மற்றுமொரு அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

 

MUST READ