
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகரும், பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமன் மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த சொகுசு பேருந்து!
சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த விக்ரமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில இணைச் செய்தித் தொடர்பாளராக இருந்து வருகிறார். இவர் மீது இளம் பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கடிதம் ஒன்றை அளித்திருந்தார்.
அதில், இரண்டு ஆண்டுகளாக விக்ரமன் தன்னை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி தன்னிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டு மோசடி செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை இன ரீதியாக அவமானப்படுத்தி, பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!
இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தான் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் உத்தரவின் படி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர், விக்ரமன் மீது நம்பிக்கை மோசடி, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், அவதூறு பரப்பியது, பாலியல் வன்கொடுமை என 10- க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.