Homeசெய்திகள்இந்தியாதொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!

-

- Advertisement -

 

ரிலையன்ஸ் ஜியோ காலாண்டு லாபம் ரூபாய் 4,863 கோடியாக அதிகரிப்பு!
Photo: Mukesh Ambani

400 கோடி ரூபாய் கொடுக்காவிட்டால் தொழிலதிபர் முகேஷ் அம்பானியை கொலை செய்து விடுவதாகக் கூறி, மேலும் ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது.

“எதிரி நாட்டுக்கு தண்ணீர் தருவது போல கர்நாடகா நினைக்கிறது”- அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியைக் கொலை செய்யப் போவதாகவும், அதை செய்யாமல் இருக்க 20 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கடந்த வாரம் ஒரு மின்னஞ்சல் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, அந்த தொகையை 200 கோடி ரூபாயாக அதிகரித்து, மின்னஞ்சல் வந்த நிலையில், தற்போது 400 கோடி ரூபாய் கோரி, மூன்றாவதாக ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. கொலை மிரட்டல் விடுத்தவர் யார் என்பதை அறிய, மும்பை காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.

ஷதாப்கான்@மெயில்ஃபென்ஸ்.காம் என்ற முகவரியில் இருந்து மின்னஞ்சல் வந்திருக்கும் நிலையில், அது குறித்த விவரங்களை இன்டெர்போல் வாயிலாக, பெல்ஜியம் நாட்டில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்திடம் இருந்து மும்பை காவல்துறைக் கோரியுள்ளது.

ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

மின்னஞ்சல் விடுத்த நபர், வேறு ஏதோ ஒரு நாட்டில் இருந்தவாறு, பெல்ஜியம் விபிஎன் வசதிகளைப் பயன்படுத்தி, மிரட்டல் விடுத்து வருவதாக மும்பை காவல்துறை சந்தேகிக்கிறது.

MUST READ