
தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து மூன்று நாட்களே ஆன நிலையில், தம்பதியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான போட்டியில் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி!
தூத்துக்குடி மாவட்டம், முருகேச நகர் பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம், அங்குள்ள ஷிப்பிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். திரு.வி.க.நகரைச் சேர்ந்த கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொண்டனர்.
திருமணத்தன்று மாலை கார்த்திகாவின் உறவினர் மாரிச்செல்வத்திடம் தகராறு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில், தம்பதி வசித்து வந்த வீட்டிற்கு சென்ற கும்பல், இருவரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பி ஓடினர்.
357 ரன்களைக் குவித்தது இந்திய அணி!
தகவலறிந்து வந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு உடற்கூராவிற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், மூன்று தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.