தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் நீட் பயிற்சி!
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், வேலூர் ஆகிய 17 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதல் திருமணம் செய்த தம்பதியர் வெட்டிக் கொலை!
ஏற்கனவே, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.