Homeசெய்திகள்பிரபல திரையரங்கு உரிமையாளர் அபிராமி ராமநாதன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

பிரபல திரையரங்கு உரிமையாளர் அபிராமி ராமநாதன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

-

பிரபல கட்டுமான நிறுவனமான அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்து வரும் நிலையில், அது தொடர்பாக சென்னை போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் எஸ்டேட் இரண்டாவது சாலையில் உள்ள பிரபல திரையரங்கு உரிமையாளர் அபிராமி ராமநாதனுக்கு சொந்தமான அலுவலகத்தில் 12 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரபல திரையரங்கு உரிமையாளர் அபிராமி ராமநாதன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

மேலும், சென்னை மயிலாப்பூரில் உள்ள நீதியரசர் ஜம்புலிங்கம் தெருவில் உள்ள அவரது வீட்டிலும் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல் சென்னை மந்தைவெளியில் உள்ள அபிராமி ராமநாதனின் மேலாளர் மோகன் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புரசைவாக்கம் கெல்லீஸ் பகுதியில் அபிராமி மெகாமால் பிரபலம். அந்த திரையரங்கை இடித்து விட்டு புதிதாக வணிக வளாகமும், அடுக்குமாடி குடியிருப்பும் கட்டுப்பட்டு வருகிறது. அபிராமி மெகா மால் மற்றும் அபிராமி திரையரங்குகள் செயல்படுவதை நிறுத்தி விட்டு, மீண்டும் புதிய கட்டிடம் கட்டப்பட இருக்கிறது.

பிரபல திரையரங்கு உரிமையாளர் அபிராமி ராமநாதன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

இதில் முதல் 3 மாடிகள் திரையரங்குகள் உள்ளிட்ட வணிக வளாகம். அதன் மீது 11 மாடிகள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களாக அமைக்கப்பட இருக்கிறது.

இந்த கட்டுமான பணிகளில் அப்பாசாமி கட்டுமான நிறுவனம் தான் மேற்கொண்டு வருவதாகவும், அப்பாசாமி நிறுவனத்தின் தொடர்ச்சியாக தான் அபிராமி ராமநாதன் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.

MUST READ