இஸ்ரோ தலைவர் சோம்நாத் எழுதிய சுயசரிதைப் புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சை ஏற்படுத்தும் அளவுக்கு அவர் என்ன சொன்னார்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
‘புதிய மருத்துவக் கல்லூரி’- பிரதமருக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடிதம்!
சந்திரயான்- 2 திட்டத்தில் தோல்விக்கான காரணமாக, லேண்டரில் இருந்து பூமிக்கு தொலைத்தொடர்பு கிடைக்கவில்லை என்று தான் மக்களுக்கு கூறப்பட்டது. ஆனால், மென்பொருளிலே தவறு ஏற்பட்டுள்ளது. அதன் அல்கரிதம் மாற்றப்பட்டுள்ளது என்பது தான் உண்மையான காரணம்.
விஞ்ஞானிகள் அனைவருக்கும் இது தெரியும். வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும், வெளிப்படைத்தன்மை அவசியம். இது தான் இஸ்ரோவின் தற்போதைய தலைவரும், சந்திரயான்- 3 திட்டத்தை வெற்றிக்கரமாகத் தரையிறக்கியதற்கு காரணமானவருமான சோம்நாத் தனது சுயசரிதையில் எழுதிய வார்த்தைகள்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனது தாய்மொழியான மலையாளத்தில் ‘நிலவு குதிச்ச சிமன்ஹல்’ (Nilavu Kudicha Simhangal) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். 160 பக்கங்களைக் கொண்ட சோம்நாத்தின் சுயசரிதை வெளியாகாத நிலையில், அவற்றின் நகல் பிரதிகள் மட்டும் சில பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டன.
இதில் உள்ள தகவல்களை வைத்து, சோம்நாத்தின் வளர்ச்சிக்கு இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன், தடையாக இருந்தார் என்று மலையாளப் பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளியாகின. இது குறித்து சோம்நாத்திடம் கேட்ட போது “நான் தலைவராவதை சிவன் தடுக்க முயன்றதாக சுயசரிதையில் கூறவில்லை. விண்வெளி கமிஷனின் உறுப்பினராக ஆக்கப்படுவதற்கு எனக்கு வாய்ப்புகள் குறைவாகக் கொடுக்கப்பட்டன.
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு தங்கக்கட்டிகள் கடத்த முயற்சி!
எனது சுயசரிதை புத்தகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. சர்ச்சைக்கு பிறகு புத்தக வெளியீட்டை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளேன். சிவனுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். எதிர்கால பணிகளுக்கான ஆலோசனைகளை சிவன் தொடர்ந்து அளித்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.