புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானர். அவருக்கு வயது 74.
உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஹர்திக் பாண்டியா விலகல்!
புதுச்சேரி அரசில் இரண்டு முறை அமைச்சராகவும், சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளையும் வகித்தவர் கண்ணன். காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்து, அக்கட்சியின் புதுச்சேரி பிரிவுத் தலைவராக இருந்தார்.
இதனையடுத்து, அங்கிருந்தும் வெளியேறி தனியாக இரண்டு கட்சிகளையும் நடத்தினார். கடந்த 2016- ஆம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்து சட்டப்பேரவையில் தேர்தலில் போட்டியிட்ட ப.கண்ணன், தோல்வி அடைந்தார். இறுதியாக பா.ஜ.க.வில் இணைந்து பின்னர் அங்கிருந்தும் விலகினார்.
உலகக்கோப்பைக் கிரிக்கெட்- தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
கடந்த சில நாட்களாக ப.கண்ணன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். மறைந்த ப.கண்ணனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.