காற்று மாசு அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார்!
டெல்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டு நான்காம் நிலை எனப்படும் இறுதி நிலையை எட்டியுள்ளது. எனவே, காற்று மாசுவைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களில் பாதி நபர்களை வீட்டில் இருந்த படியே பணிபுரியுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஹர்திக் பாண்டியா விலகல்!
வரும் நவம்பர் 10- ஆம் தேதி வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறையை நீட்டித்து, அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று (நவ.05) உத்தரவிட்டுள்ளார். அதேபோல், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த பள்ளிகள் முடிவுச் செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.