தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் நான்காவது நாளாக வருமான வரித்துறை சோதனை நீடிக்கிறது.
டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!
முறைகேடாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக, சென்னையில் காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதன் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள், நான்காவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் அவரது மகனின் வீடு, ஒப்பந்ததாரர், இரும்புக்கம்பி வியாபாரியின் வீடு, கடை என 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நான்காவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
‘இஸ்ரோ தலைவர் சோம்நாத் எழுதிய சுயசரிதை புத்தகத்தால் சர்ச்சை’!
30 கார்களில் வந்த 100- க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், கரூரில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.