Homeசெய்திகள்தமிழ்நாடு"குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதத்தில் வெளியாகும்"- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

“குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதத்தில் வெளியாகும்”- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

-

 

குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Photo: TNPSC

குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!

குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் தாமதம் குறித்து செய்திகள் வெளியான நிலையில் தமிழக நிதித்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கையின் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், “டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வின் முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு 6,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். தேர்வு மதிப்பீட்டுப் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் 80%- க்கும் மேல் நிறைவுப் பெற்றுள்ளன.

‘டைம் அவுட் விக்கெட்’- மேத்யூஸ், ஷகிப் விளக்கம்!

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 13,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 2023- 24 ஆம் ஆண்டில் மேலும் சுமார் 10,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். இரண்டாவது கணிப்பொறி ஆய்வகம் அமைக்கும் பணி நடைபெற்றதே காரணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ