திருப்பதியில் ஜிகர்தண்டா 2 படக்குழு சாமி தரிசனம்
- Advertisement -

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் ஜிகர்தண்டா. இப்படத்தில் நடித்தற்காக பாபி சிம்ஹா தேசிய விருதும் பெற்றார். அப்பொழுது முதலே படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஜிகர்தண்டா டபுல் எக்ஸ் என்னும் பெயரில் இரண்டாம் பாகம் வரும் தீபாவளி தினத்தன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் புதுமையான கதைக்களத்தில் தயாராகி வருகிறது. முதல் பாகத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.
டீசரின் தொடக்கத்திலேயே 1975 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் இப்படம் ஒரு பீரியாடிக் படமாக உருவாகியுள்ளது என்று தெரியவந்துள்ளது. படத்தில் எஸ் ஜே சூர்யா இயக்குனராகவும், ராகவா லாரன்ஸ் கேங்ஸ்டர் ஆகவும் நடித்துள்ளனர். ராகவா லாரன்ஸ் தனது முந்தைய கமர்சியல் படங்களைப் போல் அல்லாமல் ஜிகர்தண்டா டபுள் எக்சில் வித்தியாசமான கதாபாத்திரத்தை கையில் எடுத்துள்ளார்

இந்நிலையில், திரைப்படம் நாளை வெளியாக உள்ளதால் படக்குழுவினர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.