இஸ்ரோவில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேலின் செயலுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
பயணிகளின் கவனத்திற்கு….’149′ என்ற உதவி மைய எண் அறிவிப்பு!
இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் தனக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை தான் படித்த கல்லூரிகளுக்கு தானமாக வழங்கியுள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தமிழ்நாடு அரசு பாராட்டு விழா நடத்தியது.
அதில், இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமைச் சேர்த்ததாகக் கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 விஞ்ஞானிகளுக்கு ரூபாய் 25 லட்சம் பரிசுத்தொகையை வழங்கி தமிழ்நாடு அரசு கௌரவித்தது. சந்திரயான் 3- ன் திட்ட இயக்குநரான விழுப்புரத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேலுவும், தமிழ்நாடு அரசின் பரிசுத்தொகையைப் பெற்றிருந்தார்.
தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்…. சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு வழங்கிய 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை தான் படித்த நான்கு கல்லூரிகளுக்கு வீரமுத்துவேல் பகிர்ந்து வழங்கியுள்ளார். அதன்படி, விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி, தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி, திருச்சி என்.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி. ஆகிய கல்லூரிகளுக்கு வழங்கியுள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலின் இந்த செயலுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.