ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள தி வில்லேஜ் தொடர் வரும் நவம்பர் 24-ம் தேதி வெளியாகிறது.
நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள இணைய தொடர் ‘தி வில்லேஜ்’. ஷமிக் தாஸ்குப்தாவின் கிராஃபிக்ஸ் நாவலை தழுவி இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழின் முதல் கிராஃபிக்ஸ் நாவல் வெப்சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், முத்துகுமார், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த இணைய தொடரை, ஸ்டூடியோ சக்தி நிறுவனம் தயாரித்துள்ளது. ஓர் இரவில் காணாமல் போன தனது குடும்பத்தை மீட்க போராடும் நாயகனின் கதையாக இந்த தொடர் உருவாகியுள்ளது. இந்நிலையில் தொடரின் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.
The Village 🌲 series
Aval fame Milind Rau Directional
Zombie 🧟🧟♀️#TheVillage #Arya #TheVillageOnPrime pic.twitter.com/EubQrRAl3K
— Film Expose (@filmexposee) November 9, 2023