ஜெயம் ரவி தற்போது ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ‘சைரன்’ படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோரும் படத்தில் இருக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் முன்னோட்டம் ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியானது. அதில் ஜெயம் ரவி நரைத்த முடியுடன் வயதான தோற்றத்தில் கையில் ரத்தம் கறை படிந்த பட்டா கத்தியுடன் மிரட்டலாக காட்சி அளித்தார். சைரன் படத்தில் ஜெயம் ரவி இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் வயதான தோற்றத்திலும், இளைஞனாகவும் அவர் நடிக்கிறாராம்.
இந்நிலையில், சைரன் படத்தின் முன்னோட்டம் இன்று வெளியாகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையில் டீசர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.