
தூத்துக்குடி திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாகத் தொடங்கியுள்ளது.
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் சாதனை நிகழ்த்திய இந்திய அணி!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் யாகசாலைப் பூஜைகளுடன் தொடங்கிய திருவிழாவில் விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் நவம்பர் 18- ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கும் விழாவில், சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.
இதையடுத்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக கோயில் வளாகத்திலேயே தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளனர். 13 இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, 80 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, 2,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
160 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி!
பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்வைப் பார்ப்பதற்கு வசதியாக பல்வேறு ஏற்பாடுகள் கோயில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் செய்துள்ளனர்.