தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டத் தொகைக் குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மழலைச் செல்வங்கள் – தலைவர்கள் வாழ்த்து..
இது தொடர்பாக, அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுச்செயலாளர்களுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதி வரை அனைத்து அரசியல் கட்சிகளும் பெற்றுள்ள தொகை குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்தல் பத்திரமும் யாரிடம் இருந்து பெறப்பட்டது. அதன் மூலம் எவ்வளவு தொகைப் பெறப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் யாரிடமிருந்து எந்த தேதியில், எந்த கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் சுகாதாரத்துறை – டிடிவி தினகரன் சாடல்..
இந்த விவரங்களை அனைத்தையும் இரண்டு முறை சீலிடப்பட்ட கவரில் வைத்து தேர்தல் ஆணையத்தின் செலவினங்கள் பிரிவிற்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவரங்களை வரும் நவம்பர் 15- ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் தேர்தல் ஆணையத்திற்கு கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது