
சஹாரா இந்திய குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75.
சென்னையில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய மழை!
உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றால், அவதிப்பட்டு வந்த சுப்ரதா ராய், மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவ ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நவம்பர் 12- ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று (நவ.14) இரவு 10.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானதாக சஹாரா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் பிறந்த சுப்ரதா ராய் பொறியியல் பட்டம் பெற்ற பிறகு, தொழிற்துறை பக்கம் கவனத்தைத் திருப்பினார். சஹாரா நிதி நிறுவனத்தை கடந்த 1976- ஆம் ஆண்டில் வாங்கிய அவர், அதனை சஹாரா இந்திய குழுமமாக மாற்றி, நிதிக் கட்டுமானம், ஊடகம் என பல்வேறு துறைகளில் கால்பதித்து மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை தனது தனித்திறமையால் மாற்றிக் காட்டியவர்.
கூர்நோக்கு இல்லங்கள்- உயர்மட்டக் குழு பரிந்துரைகள்!
செபி உடன் ஏற்பட்ட முரண்பாட்டில் வழக்குகளை எதிர்க்கொண்ட அவர், சில காலம் சிறைவாசமும் அனுபவிக்க நேர்ந்தது. இந்திய ரயில்வேவுக்கு பிறகு, அதிக பணியாளர்களைக் கொண்டதாக சஹாரா குழுமத்தை மாற்றியவர் என புகழ்பெற்ற அவர், வாழ்க்கையில் ஏற்றங்களோடு, சவால்களையும் எதிர்க்கொண்டவர்.