திருமுல்லைவாயில் பகுதியில் தாய் மகன் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
ஆவடி அடுத்து திருமுல்லைவாயில் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி (47) காவேரி டெக்ஸ்டைல் துணிக்கடையில் சேல்ஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார்.இவருக்கு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் உடன் திருமணம் நடைபெற்று ஒரு மகள், ஒரு மகன் உள்ளார்.இவரது மகன், லோகேஸ்வரன் (30) மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஆவடி எச்.வி.எஃப் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கணவர் ரமேஷ் உடன் கருத்து வேறுபாடு காரணங்களாக சில வருடங்களாக மகன், மகளுடன் தனியாக வசித்து வந்தனர்.கடந்த இரண்டு வருடத்திற்கு முன் இவரது மகள் தந்தையே பிரிந்ததால் உளைச்சலில் இருந்த மகள் தனக்குத் தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் தனியாக வசித்து வந்த பரமேஸ்வரி மற்றும் அவரது மகன் லோகேஸ்வரன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு லோகேஸ்வரன் படுக்கை அறைக்கு சென்று தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் மகன் வெளியே வராததால் பரமேஸ்வரி படுக்கையறைக்கு சென்று பார்த்த போது லோகேஸ்வரன் தூக்கில் தொங்கியபடி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இன்று அதிகாலை இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருமுல்லைவாயில் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் திருமுல்லைவாயில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாய் மகன் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.