தேவையான பொருள்கள்:
துருவிய இஞ்சி – கால் கப்
காய்ந்த மிளகாய்- 3
தேங்காய் துருவல் – அரை கப்
புளி – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் , தேங்காய் துருவல், உளுத்தம் பருப்பு, இஞ்சி முதலியவற்றை வறுத்துக் கொள்ளவும். அத்துடன் புளி, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இறுதியாக கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் சேர்க்கவும்.
இந்தத் துவையலை அம்மியில் அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும். இந்த இஞ்சி துவையல் ஜீரண சக்தியை அதிகரிக்கும். எல்லா வயதினரும் இந்த துவையலை உண்ணலாம். இந்தத் துவையலை இட்லி, தோசை போன்றவற்றிற்கு சைடிஷாகவும் பயன்படுத்தலாம்.
இஞ்சி துவையலானது ஜீரண சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இஞ்சியானது டீ, காபி முதல் பிரியாணி வரை நாம் தினமும் பயன்படுத்தும் முக்கியமான சமையல் பொருளாக இருக்கிறது. அதனால் இந்த இஞ்சி பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.