நடிகர் கார்த்தி கடந்த ஆண்டு விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட படங்களின் மூலம் ஹார்ட்ரிக் ஹிட் கொடுத்தார். அதே வேகத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இறுதியாக கார்த்தி நடிப்பில் ஜப்பான் திரைப்படம் வெளியானது. கார்த்தியின் 25வது படமான இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்கி இருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. கடந்த நவம்பர் 10ம் தேதி வெளியான இந்த படம் தற்போது வரை 13 கோடி தான் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் கார்த்தி, நலன் குமாரசாமி இயக்கும் கார்த்தி 26 படத்தில் நடிக்கிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்க சத்யராஜ் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதேசமயம் கார்த்தி தனது 27 வது படத்திலும் நடிக்க உள்ளார். இதனை கார்த்தி, 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. தற்போது இதன் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் சில நாட்களுக்கு முன்பாக கார்த்தி 27 படத்தின் பூஜை தொடங்கப்பட்ட நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்று கும்பகோணத்தில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த்சாமி நடிக்கிறார் என்பதும் இதனை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே ஜப்பான் படத்தில் இழந்த வெற்றியை இந்த இரு படங்களிலும் பெறுவதற்காக கார்த்தி தீவிரமாக களமிறங்கி இருக்கிறார்.