
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டணம் 50% அதிகரிப்பு!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ.17) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, 21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ்குமார் யாதவ், தூத்துக்குடி எஸ்.பி. கபில் குமார் சரத்கர், துணை வட்டாட்சியர் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
“அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டண உயர்வை ரத்துச் செய்க”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!
இதையடுத்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.