Homeசெய்திகள்சினிமாரஜினியின் எதிர்காலத்தை அன்றே கணித்த ஸ்ரீதேவி!

ரஜினியின் எதிர்காலத்தை அன்றே கணித்த ஸ்ரீதேவி!

-

1970 – 80 காலகட்டங்களில் ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்கள். ரஜினியை விட கமல்ஹாசன் அனுபவம் நிறைந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. ரஜினிகாந்த்-ம் கமல்ஹாசனும் தற்போது வரை தமிழ் சினிமாவின் நடிப்பு ஜாம்பவான்களாக வலம் வருகிறார்கள். அன்று முதல் இன்று வரை பாக்ஸ் ஆபீஸை ஆளும் அரசர்களாக விளங்குபவர்கள் ரஜினியும் கமல்ஹாசன்தான். கிட்டத்தட்ட 45 வருடங்களாக இருவரும் நண்பர்களாக பழகி வருகிறார்கள்.ரஜினியின் எதிர்காலத்தை அன்றே கணித்த ஸ்ரீதேவி!

ஆனால் 70- 80 காலத்தில் ரஜினியை விட கமல்ஹாசன் அனுபவம் நிறைந்தவராக திகழ்ந்ததால் கமல்ஹாசனை விட ரஜினிக்கு குறைவான சம்பளமே கிடைத்தது. ரஜினியை விட கமல்ஹாசனை தான் மக்களுக்கு அதிகம் தெரியும். கடந்த 1977 இல் வெளியான 16 வயதினிலே திரைப்படத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகிய மூவரையுமே வித்தியாசமான பரிமாணத்தில் காண முடிந்தது. நடிகர்களில்
ரஜினி, கமல் எப்படியோ அது போல நடிகைகளில் ஸ்ரீதேவியும் ஸ்டார் நடிகையாக வலம் வந்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் கனவு கன்னியாகவும் திகழ்ந்தவர்.ரஜினியின் எதிர்காலத்தை அன்றே கணித்த ஸ்ரீதேவி! அந்த காலத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகிய மூவருமே மிகப்பெரிய ஸ்டார் நடிகர்களாக இருந்தனர். இவர்கள் மூவரும் இணைந்து 16 வயதினிலே மட்டுமில்லாமல் மூன்று முடிச்சு, தாய் இல்லாமல் நான் இல்லை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். அந்த சமயங்களில் ஸ்ரீதேவியுடனும் , ஸ்ரீதேவியின் தாயாருடனும் நடிகர் ரஜினிகாந்த் நட்பாக பழகி வந்துள்ளார். அப்போது ரஜினி, ஸ்ரீதேவியிடம் “என்னால் கமல்ஹாசனை போல பெரிய ஹீரோவாக வர முடியுமா?” என்று கேட்டாராம். அதற்கு ஸ்ரீதேவி, ” கண்டிப்பாக நீங்கள் பெரிய ஸ்டாராக வருவீர்கள்” என்று கூறியதாக மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெற்றுள்ளார். ரஜினி மிகப்பெரிய ஸ்டாராக வருவார் என்பதை மறைந்த நடிகை ஸ்ரீதேவி அன்றே கணித்ததுள்ளார்.

MUST READ