Homeசெய்திகள்தமிழ்நாடு"நாளை நீங்களும் ஆளுநராகலாம்"- சபாநாயகரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை!

“நாளை நீங்களும் ஆளுநராகலாம்”- சபாநாயகரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை!

-

- Advertisement -

 

"நாளை நீங்களும் ஆளுநராகலாம்"- சபாநாயகரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை!
Photo: TN Govt

தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (நவ.18) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, என்.சங்கரய்யா, பங்காரு அடிகளார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

“சட்டமன்றத்தை ஆளுநர் அவமதிக்கிறார்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் முன்மொழிந்து பேசினார்.

அதைத் தொடர்ந்து, தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பேரவையில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சட்டப்பேரவையில் பேசிய பா.ஜ.க.வின் சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், “ஆளுநர்கள் தான் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேசியிருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அப்போதெல்லாம் அரசுடன் பேசித்தான் ஆளுநர் துணைவேந்தர்களை நியமிப்பார்கள்” என்றார்.

காவி வேட்டியில் பேரவைக்கு வந்துள்ள ஓ.பன்னீர்செல்வம்!

இந்த நிலையில், மசோதாக்கள் மீதான விவாதத்தில் ஆளுநருக்கு எதிரான எம்.எல்.ஏ.க்களின் பேச்சைக் கண்டித்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

இதனிடையே, நாளை நீங்களும் ஆளுநராகலாம் என நயினார் நாகேந்திரனை பார்த்து சபாநாயகர் அப்பாவு கூறியதால், அனைத்து உறுப்பினர்களும் குலுங்கி குலுங்கி சிரிக்க பேரவையில் சிரிப்பலை ஒலித்தது.

MUST READ