![காவி வேட்டியில் பேரவைக்கு வந்துள்ள ஓ.பன்னீர்செல்வம்!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/11/as56-1.jpg)
ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்ற முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
காவி வேட்டியில் பேரவைக்கு வந்துள்ள ஓ.பன்னீர்செல்வம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று (நவ.18) காலை 10.00 மணிக்கு கூடிய நிலையில், ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
“நாளை நீங்களும் ஆளுநராகலாம்”- சபாநாயகரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை!
2020 தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா, 2020 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் திருத்தச் சட்ட மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத் திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகச் சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் இரண்டாம் திருத்த மசோதா, தமிழ் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட மசோதா, 2023 தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்ட மசோதா, 2023 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளது.