Homeசெய்திகள்சினிமாபிறந்தநாளன்று அருண் விஜய் செய்த நெகிழ்ச்சி சம்பவங்கள்....!

பிறந்தநாளன்று அருண் விஜய் செய்த நெகிழ்ச்சி சம்பவங்கள்….!

-

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகியிருந்தாலும் தன்னுடைய திறமையினால் தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்துக் கொண்டவர்தான் நடிகர் அருண் விஜய். ஆரம்ப காலகட்டத்தில் காதல் நாயகனாக நடித்து வந்த அருண் விஜய் தற்போது ஆக்சன் கலந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தில் அவர் நடித்த விக்டர் கதாபாத்திரம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. அதைத்தொடர்ந்து தடம் என்ற மாபெரும் திரில்லர் வெற்றி படத்தை கொடுத்தார். இவரது நடிப்பில் அடுத்ததாக வணங்கான் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்குகிறார்.பிறந்தநாள் அன்று அருண் விஜய் செய்த நெகிழ்ச்சி சம்பவங்கள்....! சமீபத்தில் தான் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். பிறந்தநாள் ஸ்பெஷலாக வணங்கான் படத்திலிருந்து சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். தாடியுடன் ஒரு முரட்டுத்தனமான வில்லேஜ் லுக்கில் இருந்தார் அருண் விஜய். மேலும் தேவையற்ற வீண் செலவுகள் ஏதும் இல்லாமல் ஆக்கபூர்வமாக ஆதரவற்ற குழந்தைகளுடன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார் அருண் விஜய். சென்னையில் உள்ள உதவும் கரங்கள் என அழைக்கப்படும் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். இந்த விழாவில் அருண் விஜயின் மனைவி மற்றும் குழந்தைகளும் கலந்து கொண்டனர். பிறந்தநாள் அன்று அருண் விஜய் செய்த நெகிழ்ச்சி சம்பவங்கள்....!
பிறந்தநாள் அன்று அருண் விஜய் செய்த நெகிழ்ச்சி சம்பவங்கள்....!அதே சமயம் ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் நடைபெறும் ரத்த தான முகாமில் கலந்து கொண்டு ரத்த தானமும் செய்துள்ளார். மேலும் ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி அவர்களுக்கு உணவு வழங்கி அவர்களையும் மகிழ்விப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ