Homeசெய்திகள்சினிமாதன் தவறை உணர்ந்து உருக்கமான பதிவை வெளியிட்ட பிக் பாஸ் எலிமினேட்டட் பிரபலம்!

தன் தவறை உணர்ந்து உருக்கமான பதிவை வெளியிட்ட பிக் பாஸ் எலிமினேட்டட் பிரபலம்!

-

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கான சாட்சி. மேலும் இது ஒரு ரியாலிட்டி ஷோ என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாம் ரசித்த பிரபலங்களை பிக் பாஸ் வீட்டில், நல்லவரா கெட்டவரா என அலசி பார்ப்பதே இந்நிகழ்ச்சியின் சுவாரஸ்யம். அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பலர் மக்களிடையே நல்ல பெயரை பெற்றனர். சிலர் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்ததும் வெளிப்படையான உண்மை. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீசன் 7 இல் இருந்து வெளியேற்றப்பட்ட பிரபலம் தான் ஐஷு.தன் தவறை உணர்ந்து உருக்கமான பதிவை வெளியிட்ட பிக் பாஸ் எலிமினேட்டட் பிரபலம்! பிரபல நடன கலைஞரான இவர் பிக் பாஸில் பங்கேற்ற ஆரம்ப காலகட்டத்தில் துருதுருவென இருந்து பார்வையாளர்களை தன் வசப்படுத்திக் கொண்டார். ஆனால் அதன் பின்னர் சக போட்டியாளரான நிக்சனுடன் சேர்ந்து கொண்டு பார்வையாளர்கள் விரும்பாத சில செயல்களை செய்து வெறுப்பை சம்பாதித்தார். இதனால் அடுத்தடுத்த நாட்களில் பார்வையாளர்களிடம் சொற்ப வாக்குகளை பெற்று சீசனில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஐஷு சில நாட்களாக இதைப் பற்றி எதுவும் பேசாமல் இருந்தார். ஆனால் தற்போது தான் வெளியேறியது பற்றி மனம் நொந்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது “என்னை நம்பியவர்களை நான் ஏமாற்றி விட்டேன். ஒரு தவறான உதாரணமாக இருந்ததற்காக நான் வருந்துகிறேன். என்னை திருத்த முயன்ற சக போட்டியாளர்களான விசித்திரா, யுகேந்திரன், தினேஷ், பிரதீப் போன்றோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என மனம் வருந்தி இன்ஸ்டாகிராமில் ஐஷூ வெளியிட்ட இந்த பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ