லியோ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்துள்ளது.
விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19 ஆம் நாளில் வெளியான திரைப்படம் தான் லியோ. இந்த படத்தை கைதி, விக்ரம், மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. ராக்ஸ்டார் அனிருத் இதற்கு இசை அமைத்திருந்தார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன், ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடித்திருந்தனர்.லியோ படத்தில் சாதுவான பார்த்திபனாக தன் மனைவி, மகன், மகள் என குடும்பத்துடன் வாழும் விஜய்யை துரத்தும் பல சம்பவங்கள். அதே சமயம் பார்த்திபனை, பல கொலைகளை செய்த லியோ என்று நினைத்து துரத்தும் ஒரு கும்பல். கடைசியில் விஜய் லியோவா? இல்லையா? என்பதுதான் படத்தின் முழு நீள கதையாகும். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த வகையில் வெளியான 12 நாட்களுக்குள் 540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் லியோ திரைப்படம் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி இந்திய அளவிலும், நவம்பர் 28ஆம் தேதி உலக அளவிலும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.