சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் அருள் சரவணன் ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் நடிகராக காலடி தடத்தை எடுத்து வைத்தார். முதல் படமே இவருக்கு ஆஹா ஓஹோ என பெயர் பெற்றுத் தந்தது. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம், நெகட்டிவ் விமர்சனம் என்பதைத் தாண்டி அனைத்து தமிழக மக்களையும் மீம்ஸ் மூலமாக சென்றடைந்தார் சரவணன்.
தற்போது இவரின் மூலமாக கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். தொழில்துறையில் தனக்கென ஒரு சாம்ராஜியத்தையே உருவாக்கி வெற்றி நடைப்போட்டு வரும் இவர் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குழந்தைகளுடன் விழாவை கொண்டாடி தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டையும் கொடுத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை அலுவலகக் கட்டடத்தினை திறந்து வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்விக்கான ஊக்க தொகையினை அவர் வழங்கினார். அப்போது பேசிய அவர் காக்கா, கழுகு அடித்துக் கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை, உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.