விசா பெறுவதற்கு போலி ஆவணங்கள் தயாரித்த ஆந்திராவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவைச் சேர்ந்த ஹேம்நாத் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் மாணவர்களுக்கான விசா விண்ணப்பித்ததாக அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் உதவி மண்டல பாதுகாப்பு அதிகாரி மெல்வின் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஹேம்நாத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்துக் கொடுத்தது ஆந்திராவைச் சேர்ந்த பால் நாடு மாவட்டத்தில் உள்ள ஹரிபாபு என்பது தெரியவந்துள்ளது. ஹரிபாபுவை சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஹரிபாபுவிடம் இருந்து இரண்டு லட்ச ரூபாய் பணம், கம்ப்யூட்டர் சிபியூ, பிரிண்டர், ஹார்ட் டிஸ்க், போலி சான்றிதழ்கள் ஆகியவை பறிமுதல் செய்தனர். பொறியியல் பட்டதாரியான ஹரிபாபு கடந்த இரண்டு வருடங்களாக போலி சான்றிதழ்கள் தயாரித்து வந்தது விசாரணையில் அம்பலமானது.