
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில், பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் விலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காராணமாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. அத்துடன் இன்று முதல் நாளை மறுநாள் ( 24ம் தேதி) வரை தமிழகம் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பாகுதிகாலில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

அதன்படியே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை 2வது நாளாக விடிய விடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் வடபழனி, கோடம்பாக்கம் , வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம், சென்ட்ரல், திநகர், கிண்டி, எழும்பூர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, திருநின்றவூர், திருவள்ளூர் பகுதிகளிலும் மிதமான மழை விடிய விடிய பெய்து வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமென மாணவர்கலும் பெற்றூர்களும் எதிர்பார்த்திருந்தனர். இந்தநிலையில் சென்னை. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல் கடலூர், நாகை, கோவை மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.