கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் விலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காராணமாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. அத்துடன் இன்று முதல் நாளை மறுநாள் ( 24ம் தேதி) வரை தமிழகம் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பாகுதிகாலில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படியே தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ஆனாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதேநேரம் புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு விடுமுறை அறிவித்து அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். முன்னதாக காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.