Homeசெய்திகள்சினிமாசதீஷ் நடிப்பில் உருவாகும் கான்ஜுரிங் கண்ணப்பன் பட ரிலீஸ் எப்போது?

சதீஷ் நடிப்பில் உருவாகும் கான்ஜுரிங் கண்ணப்பன் பட ரிலீஸ் எப்போது?

-

நடிகர் சதீஷ் நடிப்பில் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகி வரும் திரைப்படம் தான் கான்ஜூரிங் கண்ணப்பன். ஏ ஜி எஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. செல்வின் ராஜ் சேவியர் என்னும் அறிமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் சதீஷுடன் இணைந்து ரெஜினா கெசான்டிரா, நாசர், சரண்யா பொன்வண்ணன், VTV கணேஷ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. சதீஷ் நடிப்பில் உருவாகும் கான்ஜுரிங் கண்ணப்பன் பட ரிலீஸ் எப்போது?கிணற்றில் இருந்து கிடைக்கும் பழங்கால பொருள் ஒன்றில் இருக்கும் இறகுகளை பிரிப்பதால் அவர்களை சுற்றி நடக்கும் ஹாரர் சம்பவங்களை காமெடி கலந்து கூறியிருப்பதே படத்தின் கதைக்களம். அவர்கள் தூங்கும் போது கனவில் நடக்கும் ஹாரர் சம்பவங்கள் எல்லாம் நிஜத்திலும் பிரதிபலிப்பது போல ட்ரைலரில் காண்பிக்கப்பட்டது. யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார்.பிரதீப் E ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். நல்ல ஹாரர் காமெடி படமாக இப்படம் இருக்கும் என்பதால் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்து வருகிறது.சதீஷ் நடிப்பில் உருவாகும் கான்ஜுரிங் கண்ணப்பன் பட ரிலீஸ் எப்போது?

மேலும் இப்படம் வரும் டிசம்பர் மாதம் 8ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் சார்பில் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

சதீஷ், ஏற்கனவே நாய் சேகர் படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து வித்தைக்காரன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ