Homeசெய்திகள்சினிமாஜிகர்தண்டா 2 படத்திலிருந்து தீக்குச்சி வீடியோ பாடல் வெளியானது

ஜிகர்தண்டா 2 படத்திலிருந்து தீக்குச்சி வீடியோ பாடல் வெளியானது

-

கடந்த 2014 ஆம் ஆண்டில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமிமேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்திற்காக பாபி சிம்ஹா, தேசிய விருதையும் பெற்றார்.

ஜிகர்தண்டா முதல் பாகத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று தலைப்படப்பட்டுள்ள இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் கடந்த நவம்பர் 10ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியானது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வெளியான முதல் நாளிலிருந்து நல்ல வசூலை பெற்று வருகிறது.

இந்நிலையில், ஜிகர்தண்டா படத்திலிருந்து தீக்குச்சி என்ற பாடலின் காணொலி வெளியாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

MUST READ