Homeசெய்திகள்தமிழ்நாடு'துருவ நட்சத்திரம்' திரைப்படம் இன்று வெளியாகாது- இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அறிவிப்பு!

‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் இன்று வெளியாகாது- இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அறிவிப்பு!

-

 

'துருவ நட்சத்திரம்' திரைப்படம் இன்று வெளியாகாது- இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அறிவிப்பு!
File Photo

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் இன்று (நவ.24) வெளியாகாது என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

ஆவடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் : முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல்

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் இன்று (நவ.24) வெளியாக இருந்தது. இந்த நிலையில், நடிகர் சிம்புவின் படத்திற்காக, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வாங்கிய பணத்தைத் திருப்பி அளிக்கக்கோரி, ஆல் இந்த பிட்சர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தன்னிடம் பெற்ற பணத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் திருப்பித் தரும் வரை துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தினார்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் பணத்தைத் திருப்பி அளிக்காமல் படத்தை வெளியிட மாட்டோம் என்று உறுதியளித்தார்.

ஆவடி வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் : தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம்

இதனையேற்ற உயர்நீதிமன்றம், இன்று (நவ.24) காலை 10.00 மணிக்குள் ரூபாய் 2.40 கோடி பணத்தை சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் வழங்க வேண்டும்; அவ்வாறு பணத்தை வழங்காவிட்டால் படத்தை வெளியிடக்கூடாது என்று இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் இன்று வெளியாகாது என்று வருத்தத்துடன் சமூக வலைத்தளங்களில் கௌதம் வாசுதேவ் மேனன் அறிவித்துள்ளார். பிரச்சனைகளுக்கு தீர்வுக் காணப்பட்டு ஒரு சில நாளில் நிச்சயமாகத் திரைப்படம் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ