இயக்குனர் சீனு ராமசாமி தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற படங்களை இயக்கியவர். இவருடைய படங்கள் பெரும்பாலானவை வெற்றி படங்களாகவே அமைந்தன. தற்போது இவருடைய இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. வெகு நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் இந்த படம் பாடல்கள் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றன. இருப்பினும் சில காரணங்களால் இப்படம் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருக்கின்றது. நல்ல படைப்பாளர் என பெயர் எடுத்த இயக்குனர் சீனு ராமசாமி, ஆதலால் காதல் செய்வீர் வழக்கு எண் 18/9, ஒரு குப்பை கதை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மனிஷா யாதவ்விற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனால்தான் அவர் சினிமாவை விட்டு விலகியதாகவும் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்தது. மேலும் இப்பிரச்சனை குறித்து சீனு ராமசாமி மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் மனிஷா யாதவ் நடித்திருந்த ஒரு குப்பை கதை படத்தின் ஆடியோ விழாவில் தனக்கு நன்றி கூட தெரிவித்தார் என்றும் சீனு ராமசாமி குறிப்பிட்டிருந்தார். இந்த சர்ச்சையில் மௌனம் காத்து வந்த மனிஷா யாதவ் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த பதிவில் அவர் சீனு ராமசாமி மீதான குற்றச்சாட்டு உண்மைதான் என்பது போல கூறியுள்ளார். அப்பதிவில் ” ஒரு குப்பை கதை படத்தின் ஆடியோ விழாவில் மேடையில் அமர்ந்திருந்த அனைவருக்கும் தான் நான் நன்றி தெரிவித்தேன். சீனு ராமசாமியும் அங்கு அமர்ந்திருந்தார் அவ்வளவுதான்.9 வருடங்களுக்கு முன்பு நான் என்ன கூறினேனோ அதில் உறுதியாகவே உள்ளேன். என்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட நபரிடம் நான் ஏன் இணைந்து பணியாற்ற வேண்டும். சீனு ராமசாமி அவர்களே உண்மையை மட்டும் பேசுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். மனிஷா யாதவ்வின் இந்த பதிவு மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.