Homeசெய்திகள்சினிமாசின்னத்திரையில் நடிக்கும் கணேஷ் வெங்கட்ராமன்!

சின்னத்திரையில் நடிக்கும் கணேஷ் வெங்கட்ராமன்!

-

வெள்ளிக்கரையில் பணியாற்றிய பலர் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தால் சின்னத்திரையில் நடிக்க தொடங்கி விட்டனர். நடிகர்களாக இருந்தாலும் சரி நடிகைகளாக இருந்தாலும் சரி வெள்ளித்திரையில் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் சின்னத்திரையில் கலக்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் சின்னத்திரையில் அறிமகமாக இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், அபியும் நானும், உன்னை போல் ஒருவன் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 இல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.சின்னத்திரையில் நடிக்கும் கணேஷ் வெங்கட்ராமன்!

இருந்தபோதிலும் வெள்ளித்திரையில் சினிமா வாய்ப்புகள் பெரிதளவு கிடைக்காத காரணத்தால் தற்போது சின்ன திரையில் களமிறங்க இருக்கிறார். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் நினைத்தேன் வந்தாய் என்ற தொடரின் மூலம் சீரியலில் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது குறித்த அறிவிப்பு  வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றிய நிஷாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ