Homeசெய்திகள்சினிமாபுளூ ஸ்டார் படத்திலிருந்து புதிய பாடல் வெளியானது

புளூ ஸ்டார் படத்திலிருந்து புதிய பாடல் வெளியானது

-

அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புளூ ஸ்டார். இப்படத்தில் ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது. அரக்கோணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்திருக்கிறார்கள்.
இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் தமிழகன் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப்போன கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியிருக்கிறது. கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு, காதல், என ஜனரஞ்சகமான படமாக எல்லோரும் ரசிக்கும் விதமாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

இந்நிலையில், இப்படத்திலிருந்து ரயிலின் ஒலிகள் என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமண நாளை முன்னிட்டு முதல் பாடலை படக்குழு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ