Homeசெய்திகள்சினிமாவிக்ரமின் துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது?.... கௌதம் வாசுதேவ் மேனனின் பதில் என்ன?

விக்ரமின் துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது?…. கௌதம் வாசுதேவ் மேனனின் பதில் என்ன?

-

- Advertisement -

கௌதம் மேனன், விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். கடந்த 2017 இல் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு பல்வேறு பிரச்சினைகளில் காரணமாக கடந்த ஐந்து வருடங்களாக கிடப்பில் கிடந்தது. அதே சமயம் சமீபத்தில் முடிவுக்கு வந்த துருவ நட்சத்திரம் கடந்த நவம்பர் 24ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நிமிடங்களில் துருவ நட்சத்திரம் படத்திற்கு மீண்டும் தடங்கல் ஏற்பட்டது.விக்ரமின் துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது?.... கௌதம் வாசுதேவ் மேனனின் பதில் என்ன?

அதாவது ஆல் இன் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கௌதம் மேனன் பெற்ற கடனை அடைத்தால் மட்டுமே துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் செய்ய முடியும். அதுவரை துருவ நட்சத்திரம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதற்கு நவம்பர் 29ஆம் தேதிக்குள் பணத்தைக் கட்டிவிட்டு துருவ நட்சத்திரம் திரைப்படத்தை ரிலீஸ் செய்வோம் என்று கௌதம் வாசனை மேனன் தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான வழக்கு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி தொடர இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகும் என்று பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.விக்ரமின் துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது?.... கௌதம் வாசுதேவ் மேனனின் பதில் என்ன?துருவ நட்சத்திரம் திரைப்படத்தை ஒன்றாக என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசை அமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இதில் விக்ரமுடன் இணைந்து ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், ரித்து வர்மா, திவ்யதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ