
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தேஜஸ் போர் விமானத்தில் சிறிது நேரம் பயணம் செய்தார்.
உணவு பொருள் வழங்கல் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு-பொதுமக்கள் அவதி
பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகா மாநிலம், பெங்களூருவுக்கு சென்றுள்ளார். அங்குள்ள இந்திய அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஆலையைப் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் கவச உடை மற்றும் ஹெல்மெட் அணிந்துக் கொண்டு தேஜஸ் போர் விமானத்தில் அமர்ந்து சிறிது நேரம் பயணம் மேற்கொண்டார்.
தேஜஸ் விமானத்தில் வெற்றிகரமாகப் பயணித்ததாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார். பயண அனுபவம் உற்சாகமாக இருந்ததாகவும், இந்தியாவின் சுயசார்பு வலிமையின் மீதான தனது நம்பிக்கையை அதிகரித்ததாகவும் பிரதமர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபன் கைது
தேஜஸ் என்பது அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஆலையில், தேஜஸ் போர் விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன.