Homeசெய்திகள்சினிமாவில்லனாக நடிக்க வேண்டும் என்பது என் ஆசை.... பார்க்கிங் பட பிரஸ் மீட்டில் ஹரிஷ் கல்யாண்!

வில்லனாக நடிக்க வேண்டும் என்பது என் ஆசை…. பார்க்கிங் பட பிரஸ் மீட்டில் ஹரிஷ் கல்யாண்!

-

- Advertisement -

நடிகர் ஹரிஷ் கல்யாண், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மகேந்திர சிங் தோனி தயாரித்திருந்த எல்ஜிஎம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள டீசல், லப்பர் பந்து போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

அதேசமயம் ஹரிஷ் கல்யாண் பார்க்கிங் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவருடன் இணைந்து எம்எஸ் பாஸ்கர், இந்துஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.வில்லனாக நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.... பார்க்கிங் பட பிரஸ் மீட்டில் ஹரிஷ் கல்யாண்!இந்த படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனமும், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இதனை தயாரித்துள்ளது. சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில்
இந்த படத்தின் பிரஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் எம் எஸ் பாஸ்கர், ஹரிஷ் கல்யாண், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.வில்லனாக நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.... பார்க்கிங் பட பிரஸ் மீட்டில் ஹரிஷ் கல்யாண்!

அதில் பேசிய ஹரிஷ் கல்யாண், ” வில்லனாக நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அவர்களிடம் ஒரு வில்லத்தனம் இருக்கும். அந்த வில்லத்தனத்திற்கு ஒரு ஹீரோயிசத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம்குமார். இந்த கதாபாத்திரம் கிடைப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அனைவருக்கும் ஈகோ என்பது இருக்கும். அது எந்த சூழலில் எப்படி வெளிப்படுகிறது என்பது தான் முக்கியம். எம் எஸ் பாஸ்கர், இந்துஜா, பிரார்த்தனா உள்ளிட்டோர் நன்றாக நடித்துள்ளனர். படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் அதனை ஈடு செய்யும் வகையில் பின்னணி இசையை சிறப்பாக கொடுத்துள்ளார் சாம். நல்ல கதையை கொடுத்துள்ளோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தொடர்ந்து பேசியுள்ளார்.

MUST READ