நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான அநீதி திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்து வருபவர். அதே சமயம் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா கலந்து கொண்டார். வனிதா, தன் மகளுக்கு
ஆதரவாக, தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பல பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அதேசமயம் உதவி இயக்குனரும் துணை நடிகருமான பிரதீப் ஆண்டனியும் இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சில காரணங்களால் அவர் ரெட் கார்ட் கொடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியற்றப்பட்டார். இந்த பிரதீப் ஆண்டனிக்கு எதிராகவும் வனிதா தனது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவார்.
இந்நிலையில் வனிதா விஜயகுமார், பிக் பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனம் சம்பந்தமான பேட்டி ஒன்றை முடித்துவிட்டு செல்லும்போது தன்னை மர்ம நபர் ஒருவர் தாக்கியதாகவும் அது பிக் பாஸ் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் என்றும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
Brutally attacked by god knows who ! A so called #PradeepAntony supporter. Finished my #BiggBossTamil7 review and had dinner and walked down to my car i parked in my sister sowmyas house was dark and a man appeared from nowhere and said red card kudukreengala
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 26, 2023
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில், முகத்தில் ஏற்பட்ட காயங்களுடன் இருக்கும் புகைப்படத்துடன், ” நான் பிக் பாஸ் விமர்சனத்தை முடித்துவிட்டு இரவு உணவு சாப்பிட்டபின் என் காரில் இறங்கி நடந்து சென்றபோது, இருட்டுக்குள் இருந்து வந்த மர்ம நபர் ரெட் கார்டு கொடுக்குறீங்களா என்று கூறி என்னை கடுமையாக தாக்கினார். அது பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் தான்” என்று பதிவிட்டுள்ளார்.