கடந்த சில தினங்களாக திரிஷா குறித்து மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு வைரலாகி பெரும் அதிவலையை ஏற்படுத்தியது. திரிஷா, குஷ்பூ, லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்து டிஜேபிக்கு மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதன்படி, மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு திரிஷா, “தவறு செய்வது மனித இயல்பு மன்னிப்பது தெய்வீகத் தன்மை” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். எனவே இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று நினைத்து மூச்சு விடுவதற்குள் அடுத்த பூகம்பம் வெடிக்க தொடங்கியது.
அதன்படி மன்சூர் அலிகான், திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோரின் மீது மான நஷ்ட வழக்கு தொடர போவதாக அறிவித்துள்ளார். மேலும் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோவை எடிட் செய்து திரிஷாவிடம் காட்டியிருக்கிறார்கள் என்றும் அந்த முழு வீடியோவையும் வெளியிட்டு “மூவர் மீதும் கிரிமினல், பொது அமைதியை கெடுத்தது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த அதிரடி முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டும் இல்லாமல் முடிந்த பிரச்சனையை மீண்டும் மன்சூர் அலிகான் தேவையில்லாமல் தொடங்கி இருப்பதாக பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.