“காதல் தி கோர்” படத்திற்கு நடிகை சமந்தா புகழாரம்…!
நடிகர் மம்முட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் 23 ம் தேதி காதல் திகோர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. கமர்சியல் படங்கள் போல் அல்லாமல் வித்தியாசமான எதார்த்தமான படமாக உருவாகியுள்ள காதல் தி கோர் மம்முட்டி மற்றும் ஜோதிகா இருவரின் நடிப்புக்கு தீனி போடும் விதமாக அமைந்துள்ளது. அரசு பணியிலிருந்து ஓய்வுக்கு பின் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார் மம்முட்டி. ஒரு கட்டத்தில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்கிறார். அதேசமயம் மம்மூட்டி தன்னுடைய ஆண் நண்பருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறார் என்பதை தெரிந்து கொண்ட ஜோதிகா , மம்முட்டிக்கு எதிராக விவாகரத்து கேட்டு விண்ணப்பிக்கிறார். இதன் பின்னர் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மீதி கதை. இந்திய அளவில் எந்த நடிகரும் ஏற்கத் தயங்கும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை மம்முட்டி ஏற்று நடித்தது பாராட்டத்தக்கது. கணவன் ஓரினச்சேர்க்கையாளன் என்பதை தெரிந்து கொண்ட மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் எத்தகைய மனோபாவத்தில் அவரை நடத்துகின்றனர் என்பதையும் எதார்த்தம் இல்லாமல் காட்டியுள்ளனர். இப்படத்தைப் பார்த்த நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மம்முட்டி மற்றும் ஜோதிகாவை பாராட்டி உள்ளார்.இந்த ஆண்டின் சிறந்த படம் என்றும் மம்மூட்டி தான் என் ஹீரோ என்றும், ஜோதிகாவை ஐ லவ் யு ஜோதிகா, ஜியோ பேபி லெஜன்டரி என்றும் பாராட்டியுள்ளார். தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை இயக்கியிருந்த ஜியோ பேபி தான் இப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் மம்மூட்டி இப்படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். விமர்சன ரீதியாக பல்வேறு தரப்பினர் உடைய காதல் தி கோர் திரைப்படம் பாராட்டுகளைப் பற்றி வருகிறது.