Homeசெய்திகள்இந்தியாசீனாவில் வைரஸ் பரவல் காய்ச்சலையடுத்து, மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

சீனாவில் வைரஸ் பரவல் காய்ச்சலையடுத்து, மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

-

 

22 மாநிலங்களுக்கு ரூபாய் 7,532 கோடி பேரிடர் நிவாரண நிதி!
File Photo

சீனாவில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலை அடுத்து, சுகாதார முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

போலீசாக நடிக்கும் பிரபாஸ்..? அர்ஜுன் ரெட்டி பட இயக்குனருடன் கூட்டணி!

மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சீனாவில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலை அடுத்து, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைகளில் போதிய மருந்துகள், படுக்கைகள், வெண்டிலேட்டர் வசதிகள், ஆக்சிஜன் மற்றும் காய்ச்சல் பரிசோதனை கருவிகள் ஆகியவைத் தயாராக இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் தொண்டை மற்றும் மூக்கு பரிசோதனை மாதிரிகளை சுவாச நோய் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கோவிட் 19 வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தவும், மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் அனன்யாவின் ரீ என்ட்ரி….. மாயாவிற்கு விஷ பாட்டில் பட்டம்…. அடுத்தது என்ன?

இதனிடையே, ஒரே நாளில் இந்தியாவில் 21 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

MUST READ