Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்அரசியலுக்குத்தான் ஆவின் vs அமுல்-கடைகளில் ஆவின் மற்றும் அமுல்.

அரசியலுக்குத்தான் ஆவின் vs அமுல்-கடைகளில் ஆவின் மற்றும் அமுல்.

-

- Advertisement -

அரசியலுக்குத்தான் ஆவின் vs அமுல்.கடைகளில் ஆவின் மற்றும் அமுல்.ஆவின் ஆவியாக ஐந்து ஆண்டுகள் போதும்

அரசியலுக்குத்தான் ஆவின் vs அமுல்-கடைகளில் ஆவின் மற்றும் அமுல்.ஆவின் நிறுவனத்தின் ப்ரான்சைஸ் எடுத்தவர்களே விதிகளுக்குப் புறம்பாக அமுல் தயாரிப்புகளை விற்கிறார்கள். அவர்களிடம் பெரும்பாலும் கிடைக்கும் ஆவின் தயாரிப்புகள் பால், நெய் மட்டும். தயிர்கூடக் கிடைப்பதில்லை‌. வெண்ணெய், ஐஸ்கிரீம் எல்லாம் அமுல்தான் விற்கிறார்கள்.

ஆவின் நேரடியாக நடத்தும் பார்லரில்கூட ஆவின் தயாரிப்புகள் அனைத்தும் கிடைப்பதில்லை‌. இனிப்பு, ஐஸ்கிரீம், மில்க் ஷேக் இருப்பது பலருக்கும் தெரியவில்லை என்று ஆவின் பார்லர் ஊழியர்கள், டீலர்கள் சொல்கிறார்கள்.

அரசியலுக்குத்தான் ஆவின் vs அமுல்-கடைகளில் ஆவின் மற்றும் அமுல்.

எக்ஸ்பைரி ஆகும் நாட்கள் குறைவாக இருப்பதால் ஆவின் தயாரிப்புகள் வாங்கி வைத்தபின் விற்காமல் போவதாக ஒருவர் புலம்புகிறார்.குறைந்தபட்சம் மூன்று ஊர்களில் (தாராபுரம் , திருப்பூர், சேலம்) உறுதி செய்தபின்தான் இதைப்பதிகிறேன்.

அமுலின் சந்தைப்படுத்தல் முன்பு மற்ற எந்தப் பால் பொருட்கள் நிறுவனமும் ஜுஜூபிதான்‌.டெல்லியில் அரசு நிறுவனமான மதர் டைரிதான் நம்பர் ஒன். ஆனால், குர்கான் போன்ற என்.சி.ஆர் பகுதி, டெல்லிக்கு உள்ளேயே இருக்கும் துவாரகா போன்ற அமுலின் உயர்தட்டு வர்க்க டார்கெட் பகுதிகளில் அமுல்தான் அதிகமாகக் கிடைக்கும்‌. மதர் டைரியின் நேரடி பூத்களில் மட்டுமே அதன் தயாரிப்புகள் கிடைக்கும். இத்தனைக்கும் (என்னைப் பொருத்தவரை) மதர் டைரி தயாரிப்புகள் அமுலைவிட நன்றாகவே இருக்கும். குறிப்பாக இனிப்பு & ஐஸ்கிரீம்.

அரசியலுக்குத்தான் ஆவின் vs அமுல்-கடைகளில் ஆவின் மற்றும் அமுல்.

ஆவினுடன் ஒப்பிட்டால் அமுலின் தரமும் சுவையும் எந்த வகையிலும் சளைத்ததல்ல‌. அதன் மார்க்கெட்டிங் உத்திக்கு இப்போது ஆவின் ஈடுகொடுக்கவில்லை என்பதற்கு அமுல் விற்கும் ஆவின் பாலகங்களே சான்று.இப்படியே போனால் ஆவின் ஆவியாக ஐந்து ஆண்டுகள் போதும். அமுலை ஒதுக்க வேண்டாம். அதற்காக ஆவின் கடைகளையே ஆக்கிரமிக்கவும் விடவேண்டாம்.

 

MUST READ