கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் பருத்திவீரன். படம் வெளியான நாள் முதலே படத்தின் இயக்குனரான அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் இடையில் சலசலப்பு ஏற்பட்டது. முன்னதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீர் பொய் கணக்குகள் காட்டி பணத்தை மோசடி செய்து விட்டார் எனவும் அவருக்கு படம் எடுக்க தெரியாது என்றும் தொடர்ந்து பேசி வந்தார். ஆரம்பத்தில் இருந்தே இதனை அமீரும் மறுத்து அவ்வப்போது பதில் அளித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டி ஒன்றில் அமீரை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து அவமானப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். இதனால் இயக்குனர் அமீர் மிகவும் மனமடைந்து உண்மை தெரிந்தவர்களும் அமைதியாக உள்ளீர்களே என்று தன் வேதனையை வெளிப்படுத்தினார். இதனால் படத்தில் பணிபுரிந்த உண்மை அறிந்த பிரபலங்கள் அமீர் மீது எந்த தவறும் இல்லை என்றும் ஞானவேல் ராஜா தான் தேவை இன்றி பொய் குற்றச்சாட்டை முன் வைக்கிறார் என்றும் அமீருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பிரபலங்களான சமுத்திரக்கனி, சசிகுமார் போன்றோரும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். தற்போது பருத்திவீரன் படத்தில் வில்லனாக நடித்திருந்த பொன்வண்ணன் அமீருக்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்பதிவில் அவர் பருத்திவீரன் படத்தை ஞானவேல் ராஜா பாதியிலேயே கைவிட்டு விட்டதாகவும் அமீர் தான் தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி படத்தை முடித்தார், மேலும் அனைத்தும் முடிந்த பிறகு ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் என்று கூறிக்கொண்டு படத்தை வெளியிட்டார். ஞானவேல் ராஜாவின் பேட்டியில் அவருடைய உடல் மொழியில் திமிர் தான் வெளிப்பட்டது.இத்தகைய கலைஞனான அமீரை பொய் குற்றச்சாட்டுகளை கூறி அசிங்கப்படுத்துவது வேதனை அளிக்கிறது. எந்த ஒரு பிரச்சனையும் அணுகுவதற்கான வரைமுறை இருக்க வேண்டும். நீங்கள் தயாரித்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்னும் படத்தோடு பருத்தி வீரனை ஒப்பிட்டு பார்ப்பதா. ஒரு கலைஞனின் படைப்பை இது அசிங்கப்படுத்துவது போன்றது.எனவே இப்பிரச்சினையை சரியான முறையில் அணுகி தீர்வை எட்ட வேண்டும் என்று ஞானவேல் ராஜாவை ஆதங்கத்துடன் கண்டித்து இப்பதிவில் கூறியுள்ளார்.
- Advertisement -