பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் மிகப் பிரமாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. இதில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு, பாபி தியோல், நட்டி நடராஜன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார் . தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். ஒரு வரலாற்று சரித்திர படமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. சூர்யாவின் கேரியரில் கங்குவா திரைப்படம் மிகவும் முக்கியமான படமாக கருதப்படுகிறது. அதற்காக நடிகர் சூர்யா , கங்குவா படத்திற்காக கடினமாக உழைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல், ராஜமுந்திரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள கங்குவா படத்தின் படப்பிடிப்புகளை நடிகர் சூர்யா நிறைவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் படப்பிடிப்பின் போது சூர்யாவிற்கு விபத்து ஏற்பட்டு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனால் சூர்யா சில நாட்கள் ஓய்வில் இருந்து வருகிறார். மேலும் கங்குவாவில் சில காட்சிகள் மட்டும் ஆந்திராவில் இருக்கும் கடப்பா பகுதியில் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு பாபி தியோல் சம்பந்தமான காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருக்கிறதாம். இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோலுக்கு பதிலாக நடிகர் ராணா டகுபதியிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாம். ஆனால் அந்த சமயத்தில் ராணா டகுபதி, கங்குவா படத்தில் நடிப்பதற்காக 18 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டதாகவும், பாபி தியோல் 13 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக கேட்டதாகவும், அதனால் பாபி தியோலையே வில்லனாக நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து விட்டார்கள் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -